Saturday, July 5, 2008

குசேலன் பாடலில் அஜீத், விஜய் நடிக்காதது ஏன்?

குசேலன் பட பாடலில் ரஜினியுடன் அஜீத், விஜய் நடிக்காதது ஏன் என்பதற்கு வாசு விளக்கம் அளித்தார். ரஜினி, நயன்தாரா, பசுபதி நடிக்கும் குசேலன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று சென்னை சாந்தி தியேட்டரில் நடந்தது. படத்தில் ரஜினி, நடிகராகவே நடிக்கிறார். ரஜினியின் படத்தின் முதல்நாள் காட்சியை ரசிகர்கள் பார்ப்பது போன்றும், அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்தார்கள். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 ரசிகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ரஜினி ரசிகர்களுடன் 1000 துணை நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு நடித்தனர்.பின்னர் இயக்குனர் வாசு கூறுகையில், குசேலன் படத்தில் சினிமா சினிமா... எனத் தொடங்கும் பாடலில் அஜீத், விஜய், விக்ரம் உட்பட முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டோம். இப்போது அவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் இத்த¤ட்டத்தை கைவிட்டுள்ளோம் என்றார்.அஜீத், விஜய் உட்பட சில நடிகர்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அவர்கள் நடிப்பார்கள் என வாசு அறிவித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். எங்கள¢ பட ஷ¨ட்டிங்கில் பிசியாக உள்ளோம். இதனால் குசேலனில் நடிக்க முடியாமலும் போகலாம். எங்களிடம் கேட்காமலேயே எப்படி நீங்கள் இவ்வாறு அறிவிக¢கலாம்? என நடிகர்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பினர். இதனால் ரஜினியின் ஆலோசனைப்படி முன்னணி நடிகர்களை சேர்க்கும் திட்டத்தை வாசு கைவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன

Tuesday, July 1, 2008

ரஜினியுடன் விஜய், அஜீத் நடனம்

குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் குசேலன். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமா என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.
ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.

Monday, June 30, 2008

விஜய்-த்ரிஷா நட்பு தமிழ்சினிமாவில் பரபரப்பு

தொட்டும் தொடராமல் தொங்கிக் கொண்டிருந்த த்ரிஷா-விஜய் நட்பு
பழம் நழுவி பாலில் விழலாம். பழம் அழுகி வாயில் விழலாமா? அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததாலேயே 'அட போங்கப்பா' என்று எண்ணிக் கொண்டார்கள் ரசிகர்கள். இதை உணர்ந்துதான் தனது குருவி படத்தில் 'த்ரிஷா வேண்டும் என்றார் விஜய். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய குருவி இளைய தளபதிக்கு வெற்றியை கொடுத்தது. கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் விஜய், த்ரிஷாவுடனான நட்பை விஜய் துண்டித்துக் கொண்டதுதான் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள் விஜயின்ரசிகர்கள். த்ரி இடத்தில் நயன் இருந்து நடத்தி வைத்ததுதான் விசேஷம்!

Saturday, June 28, 2008

விஜய் ஒரு தெளிவான ஹீரோ...


நிஜத்தில் எப்படியோ... சினிமாவில் அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டே இருந்தால்தான் பரபரப்பும் சுவாரஸ்யமும் இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. முன்பு 1970ஆம் ஆண்டு அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் 8.
அனைத்துப் படங்களிலும் எம்ஜிஆரின் ஜோடி ஜெயலலிதாதான். இந்த எட்டுப் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அப்படியெல்லாம் ஒரே ஜோடியுடன் எந்த ஹீரோ நடித்தாலும் ஒப்புக் கொள்வதில்லை ரசிகர்கள். முன்னணி நடிகரான விஜய்யும்கூட அதற்கு விதிவிலக்கல்ல...கில்லி படம் வெளி வந்ததும் தமிழ் சினிமாவின் அசத்தல் ஜோடி விஜய் - த்ரிஷாதான் என்றார்கள். ஏற்கெனவே இந்த இருவரும் திருப்பாச்சியில் ஜோடி போட்டு, அந்தப் படமும் வெற்றி விழா கண்டிருந்தது.
விஜய்யையும் த்ரிஷாவையும் சேர்த்து ஒரு படத்தில் புக் செய்வது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டம் என்று பேசப்பட்டது.அந்த நேரத்தில்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் அசின், சிவகாசியில். படம் சூப்பர் டூப்பர் கலெக்ஷன். அடுத்த படத்திலேயே மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா, ஆதியில். விஜய்யின் மோசமான பட வரிசையில் அந்தப் படம் இடம் பிடித்துக் கொள்ள, அடுத்த படமான போக்கிரியில் மீண்டும் அசின். இருநூறு நாள் படமாக அமைந்தது போக்கிரி.

விசாரித்தால், விஜய் ஒரு தெளிவான ஹீரோ... யாருக்கு கமர்ஷியல் மார்க்கெட் உள்ளதோ அவர்களை தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அந்த வகையில்தான் இப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாகத் திகழும் நயன்தாராவைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி விஜய்யின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றார் விஜய்யின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர்.

Tuesday, June 24, 2008

happy birthday video

'அரசியல் ஆசையில்லை விஜய் பரபரப்பு பேச்சு

'அவரும் நானும் நண்பர்கள் மட்டுமே' என்று நடிகைகளும் 'அரசியல் ஆசையில்லை நாளை எதுவும் நடக்கலாம்' என நடிகர்களும் சொல்லும் வசனத்தை நம்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யும் ஒரு லேட்டஸ்ட் வசனத்தை எடுத்துரைத்துள்ளார்.

அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் மீடியாக்கள் சில வருடங்களாக கேட்ட கேள்விக்கு நேற்று இருவேறு விதமான விடை கிடைத்தது.
விஜய்க்கு நேற்று பிறந்த நாள். தனது ரசிகர்களுடன் அவர் இதனை கொண்டாடிய இடம் அரசுக்கு சொந்தமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம்.
தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம் லண்டன் கருணாகரன், நடிகர்கள் சத்யராஜ், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், தாமு நடிகை நயன்தாரா ஆகியோர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பிறந்த நாளில் கூடுதல் விஷேசமாக ரசிகர் நற்பணிமன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். வெள்ளை நிறத்திற்குள் நீல நிற வட்டமிட்டிருந்த கொடியில் வெள்ளை ஆடையில் விஜய் ஆள் காட்டி விரலை காட்டிக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

வாழ்த்துரை வழங்கிய சத்யராஜ், எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு விஜய்யின் படங்கள்தான் தன்னை கவர்ந்துள்ளதாகவும், புரட்சித்தலைவரின் பாடல்களுக்கு பிறகு விஜய்யின் பாடல்களில்தான் சமூக சிந்தனை உள்ளதாகவும் பேச 'சத்யராஜா இப்படி...' என நெளிந்த மீடியாக்காரர்கள் நிறைய.
விஜய்யின் தந்தையும் விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவருமான எஸ்.ஏ.சி. பேசும்போது இளைய தளபதியின் அரசியல் பிரவேசம் உறுதி என்பதுபோன்ற தொணியில் உணர்ச்சிவசப்பட்டார்.
"விஜய்க்கு நான் நடிகன் என்ற ரோடு மட்டுமே போட்டுக்கொடுத்தேன். அதில் ஓடி வெற்றிபெற்றதெல்லாம் அவர்தான். அதேபோல் இன்று ஒரு ரோடு போடப்பட்டுள்ளது (கொடி அறிமுகத்தை சுட்டிக்காட்டினார்) நாளை இது எப்படி மாறும் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது. நேற்று தொண்டு செய்தவர்களெல்லாம் இன்று தலைவர்களாக உள்ளனர். இன்று தொண்டு செய்பவர்கள் நாளைய தலைவராகலாம். விஜய் இப்போது தொண்டு செய்து வருகிறார்" என சூசகமாக பேசினார்
அப்பாவின் பேச்சு மேற்கு நோக்கி இருக்க, விஜய்யின் பேச்சோ வேறு திசையில் இருந்தது.
"ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இந்த கொடியை அறிமுகப்படுத்தினோமே தவிர அரசியல், கட்சி என்ற எண்ணம் எதுவுமில்லை. அரசியல் என்பது சாதாரணமான காரியம் இல்லை. பல கட்சியை சேர்ந்தவர்கள் எனது ரசிகர்களாக இருக்கும்போது நான் ஒரு கட்சியை தொடங்க வேண்டிய நிலையில் இல்லை. கட்சி தொடங்கினால் நடிகனாக நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று விஜய் பேச, எஸ்.ஏ.சந்திரசேகரின் முகத்தில் ரசாயண மாற்றம் ஏற்பட்டதை பார்க்கமுடிந்தது.
விழாவில் கறிவேப்பிலை மாதிரி ஒட்டிக் கொண்டார் நயன்தாரா. இவ்வளவு ஆரவாரம், கொடி, கோஷங்கள் என்பதை பார்த்து மிரண்டு போனாரோ என்னவோ, ஓரிரு வார்த்தைகளில் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அமர்ந்தார்

Wednesday, June 18, 2008

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்







இளைய தளபதி விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துமடல்கள் அனுப்பிய அனைத்து ரசிகர்களுக்கும் superstar விஜய் ரசிகர்கள் சார்பாக நன்றி. நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் அனைத்தும் http://www.superstarvijay.com/ and http://www.ilayathalapathyvijay.com/ இந்த இணையதளத்திள் உள் நுழைந்து பார்க்கவும் நன்றி.