Monday, June 30, 2008

விஜய்-த்ரிஷா நட்பு தமிழ்சினிமாவில் பரபரப்பு

தொட்டும் தொடராமல் தொங்கிக் கொண்டிருந்த த்ரிஷா-விஜய் நட்பு
பழம் நழுவி பாலில் விழலாம். பழம் அழுகி வாயில் விழலாமா? அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததாலேயே 'அட போங்கப்பா' என்று எண்ணிக் கொண்டார்கள் ரசிகர்கள். இதை உணர்ந்துதான் தனது குருவி படத்தில் 'த்ரிஷா வேண்டும் என்றார் விஜய். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய குருவி இளைய தளபதிக்கு வெற்றியை கொடுத்தது. கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் விஜய், த்ரிஷாவுடனான நட்பை விஜய் துண்டித்துக் கொண்டதுதான் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள் விஜயின்ரசிகர்கள். த்ரி இடத்தில் நயன் இருந்து நடத்தி வைத்ததுதான் விசேஷம்!

Saturday, June 28, 2008

விஜய் ஒரு தெளிவான ஹீரோ...


நிஜத்தில் எப்படியோ... சினிமாவில் அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டே இருந்தால்தான் பரபரப்பும் சுவாரஸ்யமும் இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. முன்பு 1970ஆம் ஆண்டு அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் 8.
அனைத்துப் படங்களிலும் எம்ஜிஆரின் ஜோடி ஜெயலலிதாதான். இந்த எட்டுப் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அப்படியெல்லாம் ஒரே ஜோடியுடன் எந்த ஹீரோ நடித்தாலும் ஒப்புக் கொள்வதில்லை ரசிகர்கள். முன்னணி நடிகரான விஜய்யும்கூட அதற்கு விதிவிலக்கல்ல...கில்லி படம் வெளி வந்ததும் தமிழ் சினிமாவின் அசத்தல் ஜோடி விஜய் - த்ரிஷாதான் என்றார்கள். ஏற்கெனவே இந்த இருவரும் திருப்பாச்சியில் ஜோடி போட்டு, அந்தப் படமும் வெற்றி விழா கண்டிருந்தது.
விஜய்யையும் த்ரிஷாவையும் சேர்த்து ஒரு படத்தில் புக் செய்வது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டம் என்று பேசப்பட்டது.அந்த நேரத்தில்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் அசின், சிவகாசியில். படம் சூப்பர் டூப்பர் கலெக்ஷன். அடுத்த படத்திலேயே மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா, ஆதியில். விஜய்யின் மோசமான பட வரிசையில் அந்தப் படம் இடம் பிடித்துக் கொள்ள, அடுத்த படமான போக்கிரியில் மீண்டும் அசின். இருநூறு நாள் படமாக அமைந்தது போக்கிரி.

விசாரித்தால், விஜய் ஒரு தெளிவான ஹீரோ... யாருக்கு கமர்ஷியல் மார்க்கெட் உள்ளதோ அவர்களை தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அந்த வகையில்தான் இப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாகத் திகழும் நயன்தாராவைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி விஜய்யின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றார் விஜய்யின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர்.

Tuesday, June 24, 2008

happy birthday video

'அரசியல் ஆசையில்லை விஜய் பரபரப்பு பேச்சு

'அவரும் நானும் நண்பர்கள் மட்டுமே' என்று நடிகைகளும் 'அரசியல் ஆசையில்லை நாளை எதுவும் நடக்கலாம்' என நடிகர்களும் சொல்லும் வசனத்தை நம்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யும் ஒரு லேட்டஸ்ட் வசனத்தை எடுத்துரைத்துள்ளார்.

அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் மீடியாக்கள் சில வருடங்களாக கேட்ட கேள்விக்கு நேற்று இருவேறு விதமான விடை கிடைத்தது.
விஜய்க்கு நேற்று பிறந்த நாள். தனது ரசிகர்களுடன் அவர் இதனை கொண்டாடிய இடம் அரசுக்கு சொந்தமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம்.
தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம் லண்டன் கருணாகரன், நடிகர்கள் சத்யராஜ், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், தாமு நடிகை நயன்தாரா ஆகியோர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பிறந்த நாளில் கூடுதல் விஷேசமாக ரசிகர் நற்பணிமன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். வெள்ளை நிறத்திற்குள் நீல நிற வட்டமிட்டிருந்த கொடியில் வெள்ளை ஆடையில் விஜய் ஆள் காட்டி விரலை காட்டிக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

வாழ்த்துரை வழங்கிய சத்யராஜ், எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு விஜய்யின் படங்கள்தான் தன்னை கவர்ந்துள்ளதாகவும், புரட்சித்தலைவரின் பாடல்களுக்கு பிறகு விஜய்யின் பாடல்களில்தான் சமூக சிந்தனை உள்ளதாகவும் பேச 'சத்யராஜா இப்படி...' என நெளிந்த மீடியாக்காரர்கள் நிறைய.
விஜய்யின் தந்தையும் விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவருமான எஸ்.ஏ.சி. பேசும்போது இளைய தளபதியின் அரசியல் பிரவேசம் உறுதி என்பதுபோன்ற தொணியில் உணர்ச்சிவசப்பட்டார்.
"விஜய்க்கு நான் நடிகன் என்ற ரோடு மட்டுமே போட்டுக்கொடுத்தேன். அதில் ஓடி வெற்றிபெற்றதெல்லாம் அவர்தான். அதேபோல் இன்று ஒரு ரோடு போடப்பட்டுள்ளது (கொடி அறிமுகத்தை சுட்டிக்காட்டினார்) நாளை இது எப்படி மாறும் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது. நேற்று தொண்டு செய்தவர்களெல்லாம் இன்று தலைவர்களாக உள்ளனர். இன்று தொண்டு செய்பவர்கள் நாளைய தலைவராகலாம். விஜய் இப்போது தொண்டு செய்து வருகிறார்" என சூசகமாக பேசினார்
அப்பாவின் பேச்சு மேற்கு நோக்கி இருக்க, விஜய்யின் பேச்சோ வேறு திசையில் இருந்தது.
"ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இந்த கொடியை அறிமுகப்படுத்தினோமே தவிர அரசியல், கட்சி என்ற எண்ணம் எதுவுமில்லை. அரசியல் என்பது சாதாரணமான காரியம் இல்லை. பல கட்சியை சேர்ந்தவர்கள் எனது ரசிகர்களாக இருக்கும்போது நான் ஒரு கட்சியை தொடங்க வேண்டிய நிலையில் இல்லை. கட்சி தொடங்கினால் நடிகனாக நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று விஜய் பேச, எஸ்.ஏ.சந்திரசேகரின் முகத்தில் ரசாயண மாற்றம் ஏற்பட்டதை பார்க்கமுடிந்தது.
விழாவில் கறிவேப்பிலை மாதிரி ஒட்டிக் கொண்டார் நயன்தாரா. இவ்வளவு ஆரவாரம், கொடி, கோஷங்கள் என்பதை பார்த்து மிரண்டு போனாரோ என்னவோ, ஓரிரு வார்த்தைகளில் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அமர்ந்தார்

Wednesday, June 18, 2008

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்







இளைய தளபதி விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துமடல்கள் அனுப்பிய அனைத்து ரசிகர்களுக்கும் superstar விஜய் ரசிகர்கள் சார்பாக நன்றி. நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் அனைத்தும் http://www.superstarvijay.com/ and http://www.ilayathalapathyvijay.com/ இந்த இணையதளத்திள் உள் நுழைந்து பார்க்கவும் நன்றி.






காரைக்குடியில் விஜய்



விஜய் நடிக்கும் 'வில்லு' படத்தை ராக்கெட் வேகத்தில் எடுத்து வருகிறார் பிரபுதேவா. விஜய், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'வில்லு' படத்தை தொடக்கவிழா கூட நடத்தாமல், பொள்ளாச்சியில் சின்ன பூஜையுடன் தொடங்கினார் பிரபுதேவா. பொள்ளாச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விஜய்-நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன.
பிறகு பழனியில் சில காட்சிகளை எடுத்தார் பிரபுதேவா. நான்-ஸ்டாப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தால் பிரபுதேவா, விஜய் உள்ளிட்ட 'வில்லு' டீம் தசாவதாரத்தை பழனி திரையரங்கிலேயே பார்த்தனர்.

அடுத்து விஜய் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக வில்லு யூனிட் காரைக்குடி சென்றுள்ளது. காட்சிகளை ரவிவர்மன் படமாக்கி வருகிறார்.
'வில்லு' இந்தி 'சோல்ஜரின்' ரீ-மேக் என்று செயதி வெளியானது. இது குறித்து பிரபுதேவா, விஜய் இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோன்று 'வில்லு' பட ஸ்டில்கள் வெளியே போகமலிருக்கவும் ஏக கெடுபிடிகள்.
தேவையின்றி எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறார்களா?

Monday, June 16, 2008

பழனியில் விஜய் - நயன்தாரா



விஜய், நயன்தாரா முதன் முதலாக இணையும் 'வில்லு' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறதுஇந்தி 'சோல்ஜர்' படத்தின் ரீ-மேக் இது என்று பரவலான பேச்சு.
அதற்கு முன்பு ஒரேயொரு நாள் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. நடனப் பெண்களின் நடுவில் விஜய் மான் கொம்புடன் ஆடுவதை ஒருநாள் முழுதும் ஷூட் செய்தார் பிரபுதேவா. இந்த போட்டோசெஷனில் நயன்தாரா மிஸ்ஸிங்.

'வில்லு'வின் சில காட்சிகள் பழனியில் எடுக்கப்பட உள்ளன. இதனால் பத்து நாட்கள் விஜய்யும், நயன்தாராவும் பழனியில் தங்க உள்ளனர். பொள்ளாச்சியிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரபுதேவாவின் வேகத்தைப் பார்த்த யூனிட் ஆட்கள், தீபாவளிக்கு முன்பே 'வில்லு' திரைக்கு வரும் என்கிறார்கள்

வில்லு என்ற பெயரை அறிவித்தவுடன் புலம்பும் சூர்ய இயக்குனர்


சிங்கம் டைட்டில் கிடைக்காததால் வில்லு என்ற பெயரோடு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் பிரபுதேவா. பொருத்தமாக இருக்கும் என்றுதான் சிங்கத்தை பிடிக்க முயற்சி செய்தார் விஜய். ஆனால், இந்த டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் ஹரி, பிடிவாதமாக இருந்துவிட்டதால், வேறு டைட்டிலுக்கு தாவினார்கள் பிரபுதேவாவும், விஜயும்.
வில்லு என்ற பெயரை அறிவித்தவுடன், வில் என்ற டைட்டில் வைத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, மகிழ்ச்சியோடு இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்ததாக செய்திகள் கசிந்தன. அதை நம்புகிற விதமாக அடிக்கடி விஜயை சந்தித்து கதை சொல்ல நேரமும் கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா. டைட்டில் கொடுத்தால், கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் விட்டுக் கொடுத்துவிட்டாரோ என்ற எண்ணத்தையும் விதைத்தது இந்த வில்லு மேட்டர். ஆனால் உண்மை அதுவல்லவாம்.
வில் என்ற டைட்டில் சூர்யாவிடம் இருப்பது தெரிந்தே வில்லு என்று வைத்து விட்டார்களாம். சூர்யாவிடம் கேட்டால், கொடுப்பாரோ, மாட்டாரோ என்ற ஐயம் இருந்ததால் இப்படி குறுக்கு வழியை கடை பிடித்ததாக கூறுகிறார்கள். சூர்யா தரப்பில் என்ன சொல்லப்படுகிறது?
"எந்த டைட்டிலில் நடிக்கலாம் என்று நாள் கணக்கில் யோசிக்கலாம். தவறேயில்லை. ஆனால் எந்த டைட்டிலை அடிக்கலாம் என்று யோசிக்கிறாங்களே... என்ன செய்வது" என்றாராம். அட, சின்னப்புள்ள தனமா இருக்கே!

Wednesday, June 4, 2008

விஜய் நடிக்கும் வில்லு


விஜய் நடிக்கும் வில்லு பட ஷூட்டிங்கில் ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மீது தனியார் பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், பலரது மண்டை உடைந்தகது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய், நயனதாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.
நெய்காரபட்டியில் உள்ள ஜமீன் பங்களாவில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் பழனியில் ஷூட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் அருகில் உள்ள பகுதிகளுக்கு காட்டுத் தீயாக பரவியது. இதனால் அருகில் உள்ள கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
மேலும் பள்ளி சென்று வீடு திரும்பிய கிராம குழந்தைகளும், ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஷூட்டிங்கிற்காக அழைத்து வரப்பட்ட தனியார் செக்யூரிட்டி அமைப்பினர் விஜய் ரசிகர்கள் மீதும், கிராம மக்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர்களில் பலருக்கு மண்டை உடைந்தது. பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். படக் குழுவினர் மீது கிராம மக்கள் ஆத்திரத்துடன் இருப்பதால் படக்குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் படத்தின் பெயர் மாற்றப்படுகிறது.புதிய படம் ''வில்லு''
விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வில்லு என மாற்றப்பட்டுள்ளது.விஜய், பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர். இருவரும் முன்பு இணைந்து கொடுத்த படம் போக்கிரி. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் 2வது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயனதாரா. கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் ஆடிய நயனதாரா, முதல் முறையாக விஜய்யுடன் தனி நாயகியாக நடிக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்பெயரை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால், அதை மாற்றி வில் என புதுப் பெயர் சூட்டினர்.ஆனால் இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கம் பிளஸ் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதனால் விஜய் படப் பெயர் மாறுமா, மாறாதா என்ற குழப்பம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று முதல் விஜய், பிரபுதேவாவின் புதுப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் பெயரை வில் என்பதற்குப் பதில் வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார்.



விஜயின் புதிய படத்தின் பெயர் வில்லு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸில் வில்லு, ஜூன் 6 ஆம் தேதியுடன் தனது பயணத்தை தொடங்குகிறதாம்.விஜயின் ஜோடி நயன்தாரா என்பது ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை தேவிஸ்ரீ பிரசாத் என்பதும் ஏற்கனவே முடிவான விஷயம்.'வில்லு'வில் இரண்டு வில்லாதி வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரகாஷ்ராஜ். இன்னொருவர் பிஜுமேனன். ஏற்கனவே தமிழ்ப் படங்களில் பிஜுமேனன் நடித்திருந்தாலும் அரசாங்கம் படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வருகிறதாம். முதல் வாய்ப்பு வில்லு!போக்கிரியைத் தொடர்ந்து வில்லுவையும் வெற்றிபெற வைப்பார் பிரபுதேவா என்ற நம்பிக்கை விஜய்க்கு. நமக்கும் அதே நம்பிக்கைதான்

Sunday, June 1, 2008

முதலிடத்தில் குருவி!

ஸ்டார் பவர் என்ன என்பதை பாக்ஸ் ஆஃபிஸில் நிரூபித்திருக்கிறது குருவி. கதை சரியில்லை, திரைக்கதை சரியில்லை மொத்தத்தில் படமே சரியில்லை என்ற விமர்சனங்களைக் கடந்து, இன்றும் சென்னை பாக்ஸ் ஆ·பிஸில் முதலிடத்தில் குருவி! காரணம் விஜய்... விஜய்... விஜய்...!கடந்தவார இறுதி வரை இரண்டரை கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது குருவி. வார இறுதி வசூலில் குருவிக்கு அடுத்த இடத்தில் சந்தோஷ் சுப்ரமணியம். அடுத்து பாண்டி. நான்காவது, யாரடி நீ மோகினி!யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களின் மொத்த வசூலை இந்த வாரத்தில் குருவி முந்துவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், குருவி பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இந்த கலெக்சன் ஆவரேஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.