Saturday, July 5, 2008

குசேலன் பாடலில் அஜீத், விஜய் நடிக்காதது ஏன்?

குசேலன் பட பாடலில் ரஜினியுடன் அஜீத், விஜய் நடிக்காதது ஏன் என்பதற்கு வாசு விளக்கம் அளித்தார். ரஜினி, நயன்தாரா, பசுபதி நடிக்கும் குசேலன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று சென்னை சாந்தி தியேட்டரில் நடந்தது. படத்தில் ரஜினி, நடிகராகவே நடிக்கிறார். ரஜினியின் படத்தின் முதல்நாள் காட்சியை ரசிகர்கள் பார்ப்பது போன்றும், அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்தார்கள். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 ரசிகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ரஜினி ரசிகர்களுடன் 1000 துணை நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு நடித்தனர்.பின்னர் இயக்குனர் வாசு கூறுகையில், குசேலன் படத்தில் சினிமா சினிமா... எனத் தொடங்கும் பாடலில் அஜீத், விஜய், விக்ரம் உட்பட முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டோம். இப்போது அவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் இத்த¤ட்டத்தை கைவிட்டுள்ளோம் என்றார்.அஜீத், விஜய் உட்பட சில நடிகர்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அவர்கள் நடிப்பார்கள் என வாசு அறிவித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். எங்கள¢ பட ஷ¨ட்டிங்கில் பிசியாக உள்ளோம். இதனால் குசேலனில் நடிக்க முடியாமலும் போகலாம். எங்களிடம் கேட்காமலேயே எப்படி நீங்கள் இவ்வாறு அறிவிக¢கலாம்? என நடிகர்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பினர். இதனால் ரஜினியின் ஆலோசனைப்படி முன்னணி நடிகர்களை சேர்க்கும் திட்டத்தை வாசு கைவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன

Tuesday, July 1, 2008

ரஜினியுடன் விஜய், அஜீத் நடனம்

குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் குசேலன். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமா என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.
ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.

Monday, June 30, 2008

விஜய்-த்ரிஷா நட்பு தமிழ்சினிமாவில் பரபரப்பு

தொட்டும் தொடராமல் தொங்கிக் கொண்டிருந்த த்ரிஷா-விஜய் நட்பு
பழம் நழுவி பாலில் விழலாம். பழம் அழுகி வாயில் விழலாமா? அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததாலேயே 'அட போங்கப்பா' என்று எண்ணிக் கொண்டார்கள் ரசிகர்கள். இதை உணர்ந்துதான் தனது குருவி படத்தில் 'த்ரிஷா வேண்டும் என்றார் விஜய். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய குருவி இளைய தளபதிக்கு வெற்றியை கொடுத்தது. கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் விஜய், த்ரிஷாவுடனான நட்பை விஜய் துண்டித்துக் கொண்டதுதான் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள் விஜயின்ரசிகர்கள். த்ரி இடத்தில் நயன் இருந்து நடத்தி வைத்ததுதான் விசேஷம்!

Saturday, June 28, 2008

விஜய் ஒரு தெளிவான ஹீரோ...


நிஜத்தில் எப்படியோ... சினிமாவில் அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டே இருந்தால்தான் பரபரப்பும் சுவாரஸ்யமும் இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. முன்பு 1970ஆம் ஆண்டு அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் 8.
அனைத்துப் படங்களிலும் எம்ஜிஆரின் ஜோடி ஜெயலலிதாதான். இந்த எட்டுப் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அப்படியெல்லாம் ஒரே ஜோடியுடன் எந்த ஹீரோ நடித்தாலும் ஒப்புக் கொள்வதில்லை ரசிகர்கள். முன்னணி நடிகரான விஜய்யும்கூட அதற்கு விதிவிலக்கல்ல...கில்லி படம் வெளி வந்ததும் தமிழ் சினிமாவின் அசத்தல் ஜோடி விஜய் - த்ரிஷாதான் என்றார்கள். ஏற்கெனவே இந்த இருவரும் திருப்பாச்சியில் ஜோடி போட்டு, அந்தப் படமும் வெற்றி விழா கண்டிருந்தது.
விஜய்யையும் த்ரிஷாவையும் சேர்த்து ஒரு படத்தில் புக் செய்வது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டம் என்று பேசப்பட்டது.அந்த நேரத்தில்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் அசின், சிவகாசியில். படம் சூப்பர் டூப்பர் கலெக்ஷன். அடுத்த படத்திலேயே மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா, ஆதியில். விஜய்யின் மோசமான பட வரிசையில் அந்தப் படம் இடம் பிடித்துக் கொள்ள, அடுத்த படமான போக்கிரியில் மீண்டும் அசின். இருநூறு நாள் படமாக அமைந்தது போக்கிரி.

விசாரித்தால், விஜய் ஒரு தெளிவான ஹீரோ... யாருக்கு கமர்ஷியல் மார்க்கெட் உள்ளதோ அவர்களை தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அந்த வகையில்தான் இப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாகத் திகழும் நயன்தாராவைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி விஜய்யின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றார் விஜய்யின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர்.

Tuesday, June 24, 2008

happy birthday video

'அரசியல் ஆசையில்லை விஜய் பரபரப்பு பேச்சு

'அவரும் நானும் நண்பர்கள் மட்டுமே' என்று நடிகைகளும் 'அரசியல் ஆசையில்லை நாளை எதுவும் நடக்கலாம்' என நடிகர்களும் சொல்லும் வசனத்தை நம்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யும் ஒரு லேட்டஸ்ட் வசனத்தை எடுத்துரைத்துள்ளார்.

அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் மீடியாக்கள் சில வருடங்களாக கேட்ட கேள்விக்கு நேற்று இருவேறு விதமான விடை கிடைத்தது.
விஜய்க்கு நேற்று பிறந்த நாள். தனது ரசிகர்களுடன் அவர் இதனை கொண்டாடிய இடம் அரசுக்கு சொந்தமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம்.
தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம் லண்டன் கருணாகரன், நடிகர்கள் சத்யராஜ், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், தாமு நடிகை நயன்தாரா ஆகியோர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பிறந்த நாளில் கூடுதல் விஷேசமாக ரசிகர் நற்பணிமன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். வெள்ளை நிறத்திற்குள் நீல நிற வட்டமிட்டிருந்த கொடியில் வெள்ளை ஆடையில் விஜய் ஆள் காட்டி விரலை காட்டிக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

வாழ்த்துரை வழங்கிய சத்யராஜ், எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு விஜய்யின் படங்கள்தான் தன்னை கவர்ந்துள்ளதாகவும், புரட்சித்தலைவரின் பாடல்களுக்கு பிறகு விஜய்யின் பாடல்களில்தான் சமூக சிந்தனை உள்ளதாகவும் பேச 'சத்யராஜா இப்படி...' என நெளிந்த மீடியாக்காரர்கள் நிறைய.
விஜய்யின் தந்தையும் விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவருமான எஸ்.ஏ.சி. பேசும்போது இளைய தளபதியின் அரசியல் பிரவேசம் உறுதி என்பதுபோன்ற தொணியில் உணர்ச்சிவசப்பட்டார்.
"விஜய்க்கு நான் நடிகன் என்ற ரோடு மட்டுமே போட்டுக்கொடுத்தேன். அதில் ஓடி வெற்றிபெற்றதெல்லாம் அவர்தான். அதேபோல் இன்று ஒரு ரோடு போடப்பட்டுள்ளது (கொடி அறிமுகத்தை சுட்டிக்காட்டினார்) நாளை இது எப்படி மாறும் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது. நேற்று தொண்டு செய்தவர்களெல்லாம் இன்று தலைவர்களாக உள்ளனர். இன்று தொண்டு செய்பவர்கள் நாளைய தலைவராகலாம். விஜய் இப்போது தொண்டு செய்து வருகிறார்" என சூசகமாக பேசினார்
அப்பாவின் பேச்சு மேற்கு நோக்கி இருக்க, விஜய்யின் பேச்சோ வேறு திசையில் இருந்தது.
"ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இந்த கொடியை அறிமுகப்படுத்தினோமே தவிர அரசியல், கட்சி என்ற எண்ணம் எதுவுமில்லை. அரசியல் என்பது சாதாரணமான காரியம் இல்லை. பல கட்சியை சேர்ந்தவர்கள் எனது ரசிகர்களாக இருக்கும்போது நான் ஒரு கட்சியை தொடங்க வேண்டிய நிலையில் இல்லை. கட்சி தொடங்கினால் நடிகனாக நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று விஜய் பேச, எஸ்.ஏ.சந்திரசேகரின் முகத்தில் ரசாயண மாற்றம் ஏற்பட்டதை பார்க்கமுடிந்தது.
விழாவில் கறிவேப்பிலை மாதிரி ஒட்டிக் கொண்டார் நயன்தாரா. இவ்வளவு ஆரவாரம், கொடி, கோஷங்கள் என்பதை பார்த்து மிரண்டு போனாரோ என்னவோ, ஓரிரு வார்த்தைகளில் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அமர்ந்தார்

Wednesday, June 18, 2008

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்







இளைய தளபதி விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துமடல்கள் அனுப்பிய அனைத்து ரசிகர்களுக்கும் superstar விஜய் ரசிகர்கள் சார்பாக நன்றி. நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் அனைத்தும் http://www.superstarvijay.com/ and http://www.ilayathalapathyvijay.com/ இந்த இணையதளத்திள் உள் நுழைந்து பார்க்கவும் நன்றி.






காரைக்குடியில் விஜய்



விஜய் நடிக்கும் 'வில்லு' படத்தை ராக்கெட் வேகத்தில் எடுத்து வருகிறார் பிரபுதேவா. விஜய், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'வில்லு' படத்தை தொடக்கவிழா கூட நடத்தாமல், பொள்ளாச்சியில் சின்ன பூஜையுடன் தொடங்கினார் பிரபுதேவா. பொள்ளாச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விஜய்-நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன.
பிறகு பழனியில் சில காட்சிகளை எடுத்தார் பிரபுதேவா. நான்-ஸ்டாப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தால் பிரபுதேவா, விஜய் உள்ளிட்ட 'வில்லு' டீம் தசாவதாரத்தை பழனி திரையரங்கிலேயே பார்த்தனர்.

அடுத்து விஜய் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக வில்லு யூனிட் காரைக்குடி சென்றுள்ளது. காட்சிகளை ரவிவர்மன் படமாக்கி வருகிறார்.
'வில்லு' இந்தி 'சோல்ஜரின்' ரீ-மேக் என்று செயதி வெளியானது. இது குறித்து பிரபுதேவா, விஜய் இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோன்று 'வில்லு' பட ஸ்டில்கள் வெளியே போகமலிருக்கவும் ஏக கெடுபிடிகள்.
தேவையின்றி எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறார்களா?

Monday, June 16, 2008

பழனியில் விஜய் - நயன்தாரா



விஜய், நயன்தாரா முதன் முதலாக இணையும் 'வில்லு' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறதுஇந்தி 'சோல்ஜர்' படத்தின் ரீ-மேக் இது என்று பரவலான பேச்சு.
அதற்கு முன்பு ஒரேயொரு நாள் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. நடனப் பெண்களின் நடுவில் விஜய் மான் கொம்புடன் ஆடுவதை ஒருநாள் முழுதும் ஷூட் செய்தார் பிரபுதேவா. இந்த போட்டோசெஷனில் நயன்தாரா மிஸ்ஸிங்.

'வில்லு'வின் சில காட்சிகள் பழனியில் எடுக்கப்பட உள்ளன. இதனால் பத்து நாட்கள் விஜய்யும், நயன்தாராவும் பழனியில் தங்க உள்ளனர். பொள்ளாச்சியிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரபுதேவாவின் வேகத்தைப் பார்த்த யூனிட் ஆட்கள், தீபாவளிக்கு முன்பே 'வில்லு' திரைக்கு வரும் என்கிறார்கள்

வில்லு என்ற பெயரை அறிவித்தவுடன் புலம்பும் சூர்ய இயக்குனர்


சிங்கம் டைட்டில் கிடைக்காததால் வில்லு என்ற பெயரோடு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் பிரபுதேவா. பொருத்தமாக இருக்கும் என்றுதான் சிங்கத்தை பிடிக்க முயற்சி செய்தார் விஜய். ஆனால், இந்த டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் ஹரி, பிடிவாதமாக இருந்துவிட்டதால், வேறு டைட்டிலுக்கு தாவினார்கள் பிரபுதேவாவும், விஜயும்.
வில்லு என்ற பெயரை அறிவித்தவுடன், வில் என்ற டைட்டில் வைத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, மகிழ்ச்சியோடு இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்ததாக செய்திகள் கசிந்தன. அதை நம்புகிற விதமாக அடிக்கடி விஜயை சந்தித்து கதை சொல்ல நேரமும் கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா. டைட்டில் கொடுத்தால், கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் விட்டுக் கொடுத்துவிட்டாரோ என்ற எண்ணத்தையும் விதைத்தது இந்த வில்லு மேட்டர். ஆனால் உண்மை அதுவல்லவாம்.
வில் என்ற டைட்டில் சூர்யாவிடம் இருப்பது தெரிந்தே வில்லு என்று வைத்து விட்டார்களாம். சூர்யாவிடம் கேட்டால், கொடுப்பாரோ, மாட்டாரோ என்ற ஐயம் இருந்ததால் இப்படி குறுக்கு வழியை கடை பிடித்ததாக கூறுகிறார்கள். சூர்யா தரப்பில் என்ன சொல்லப்படுகிறது?
"எந்த டைட்டிலில் நடிக்கலாம் என்று நாள் கணக்கில் யோசிக்கலாம். தவறேயில்லை. ஆனால் எந்த டைட்டிலை அடிக்கலாம் என்று யோசிக்கிறாங்களே... என்ன செய்வது" என்றாராம். அட, சின்னப்புள்ள தனமா இருக்கே!

Wednesday, June 4, 2008

விஜய் நடிக்கும் வில்லு


விஜய் நடிக்கும் வில்லு பட ஷூட்டிங்கில் ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மீது தனியார் பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், பலரது மண்டை உடைந்தகது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய், நயனதாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.
நெய்காரபட்டியில் உள்ள ஜமீன் பங்களாவில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் பழனியில் ஷூட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் அருகில் உள்ள பகுதிகளுக்கு காட்டுத் தீயாக பரவியது. இதனால் அருகில் உள்ள கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
மேலும் பள்ளி சென்று வீடு திரும்பிய கிராம குழந்தைகளும், ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஷூட்டிங்கிற்காக அழைத்து வரப்பட்ட தனியார் செக்யூரிட்டி அமைப்பினர் விஜய் ரசிகர்கள் மீதும், கிராம மக்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர்களில் பலருக்கு மண்டை உடைந்தது. பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். படக் குழுவினர் மீது கிராம மக்கள் ஆத்திரத்துடன் இருப்பதால் படக்குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் படத்தின் பெயர் மாற்றப்படுகிறது.புதிய படம் ''வில்லு''
விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வில்லு என மாற்றப்பட்டுள்ளது.விஜய், பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர். இருவரும் முன்பு இணைந்து கொடுத்த படம் போக்கிரி. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் 2வது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயனதாரா. கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் ஆடிய நயனதாரா, முதல் முறையாக விஜய்யுடன் தனி நாயகியாக நடிக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்பெயரை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால், அதை மாற்றி வில் என புதுப் பெயர் சூட்டினர்.ஆனால் இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கம் பிளஸ் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதனால் விஜய் படப் பெயர் மாறுமா, மாறாதா என்ற குழப்பம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று முதல் விஜய், பிரபுதேவாவின் புதுப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் பெயரை வில் என்பதற்குப் பதில் வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார்.



விஜயின் புதிய படத்தின் பெயர் வில்லு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸில் வில்லு, ஜூன் 6 ஆம் தேதியுடன் தனது பயணத்தை தொடங்குகிறதாம்.விஜயின் ஜோடி நயன்தாரா என்பது ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை தேவிஸ்ரீ பிரசாத் என்பதும் ஏற்கனவே முடிவான விஷயம்.'வில்லு'வில் இரண்டு வில்லாதி வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரகாஷ்ராஜ். இன்னொருவர் பிஜுமேனன். ஏற்கனவே தமிழ்ப் படங்களில் பிஜுமேனன் நடித்திருந்தாலும் அரசாங்கம் படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வருகிறதாம். முதல் வாய்ப்பு வில்லு!போக்கிரியைத் தொடர்ந்து வில்லுவையும் வெற்றிபெற வைப்பார் பிரபுதேவா என்ற நம்பிக்கை விஜய்க்கு. நமக்கும் அதே நம்பிக்கைதான்

Sunday, June 1, 2008

முதலிடத்தில் குருவி!

ஸ்டார் பவர் என்ன என்பதை பாக்ஸ் ஆஃபிஸில் நிரூபித்திருக்கிறது குருவி. கதை சரியில்லை, திரைக்கதை சரியில்லை மொத்தத்தில் படமே சரியில்லை என்ற விமர்சனங்களைக் கடந்து, இன்றும் சென்னை பாக்ஸ் ஆ·பிஸில் முதலிடத்தில் குருவி! காரணம் விஜய்... விஜய்... விஜய்...!கடந்தவார இறுதி வரை இரண்டரை கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது குருவி. வார இறுதி வசூலில் குருவிக்கு அடுத்த இடத்தில் சந்தோஷ் சுப்ரமணியம். அடுத்து பாண்டி. நான்காவது, யாரடி நீ மோகினி!யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களின் மொத்த வசூலை இந்த வாரத்தில் குருவி முந்துவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், குருவி பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இந்த கலெக்சன் ஆவரேஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, May 30, 2008

சிங்கம் படத்திற்க்கு பிரபுதேவாவும், விஜயும் தயார்


இன்னும் சில வாரங்களில் பிரபுதேவாவும், விஜயும் சிங்கத்திற்காக தன்னை தயார் செய்ய துவங்கி விடுவார். (சிங்கம் இப்போ ஹரி கஸ்டடியில் இருக்குதாமே?) பிரபுதேவாவும், விஜயும் இணைந்து உட்கார்ந்து டைட்டில் விஷயத்தை முடிவு செய்வார்களாம். இந்த முறை எவ்வித தடுமாற்றமும் ஆகிவிட கூடாது என்பதால், வடிவேலுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இறங்க முடிவு செய்துவிட்டார் விஜய். எப்பவுமே இப்படி டிமாண்ட் வந்தால் கேட்ட சம்பளத்தை கொடுத்துதானே ஆக வேண்டும்? வடிவேலுவின் கைகளில் இரண்டு கோடி வந்ததாக தகவல். உண்மையாக இருந்தால், வடிவேலுவின் வேட்டையில் இது சரியான திமிங்கலம்தான்!

Thursday, May 29, 2008

Wednesday, May 28, 2008

birthday of vijay 22/06/2008

This month June 22nd anniversary date of Tamil superstar Vijay ilayathalapathy Vijay. So if you want to send birthday cards or to congratulate him. Send this e-mail address by p_kanojan@hotmail.com and fansvijay@hotmail.com. Send the Advent 20/06/2008 thank you
இம்மாதம் (ஜீன்) 22ம் திகதி ஜீன் மாதம் next superstar "இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு நீங்களும் வாழ்த்த விரும்புகிரீர்களா? பிறந்தநாள் வாழ்த்து மடல்கள், வாழ்த்துக்கள் தெரிவிக்க அல்லது அனுப்ப விரும்பிகிரீர்களா? fansvijay@hotmail.com and p_kanojan@hotmail.com இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள், 20/06/2008 க்கு முன் அனுப்பிவையுங்கள் நன்றி

Sunday, May 25, 2008

விஜய் ஜோடி நயன்தாரா

விஜய்யின் புதிய படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விரைவில் தொடங்குகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் சுமார் என்பதால் உஷாராக ரீ-மேக் படத்தை தேர்வு செய்துள்ளார் விஜய்.இந்தியில் அமிதாப் நடித்த 'சோல்ஜா' படத்தின் ரீ-மேக் தமிழுக்கு ஏற்ற காரம் மசாலாவுடன் தயாராகியிருக்கிறது. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்துள்ளனர்.'தசாவதாரம்' படத்தின் ஒளிப்பதிவாளரும் 'மாஸ்கோவின் காவிரி' படத்தின் இயக்குனருமான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பது தேவிஸ்ரீபிரசாத்.கஜகஸ்தானில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதால், லொக்கேஷன் பார்க்க முதன்மை தயாரிப்பாளர் அருண் பாண்டியனும், பிரபுதேவாவும் கஜகஸ்தான் சென்றுள்ளனர். இப்போதுள்ள ஒரே பிரச்சனை, பெயர், சிங்கம் என்ற பெயருக்கு ஹரி சொந்தம் கொண்டாடுவதால், நல்ல பெயராக தேடி வருகிறார்கள். சிங்கம் மாதிரி உறுமலாக பெயர் இருந்தால் நீங்களும் பிரபுதேவாவுக்கு உதவலாம்

kuruvi thiraivimarsanam



Friday, May 16, 2008

Sunday, May 11, 2008

Thursday, May 8, 2008

kuruvi trailor

ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது 'குருவி'.


பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் 'குருவி'!
வியாழக்கிழமை, 8 மே 2008 ( 16:49 IST )'குருவி'க்கு விமர்சனங்கள்தான் சாதகமாக இல்லை என்றாலும், அதிரடி ஒபனிங் மூலம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.'கில்லி' போல் இல்லை என்று விஜய் ரசிகர்கள் உள்பட பல தரப்பும் கூறி வந்தாலும், சென்ற வார இறுதியில் ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது 'குருவி'.இரண்டாம் இடத்திலுள்ள ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்', பதினெட்டே கால் லட்சங்களை ஈட்டியுள்ளார்.தனுஷின் 'யாரடி நீ மோகினி', வார இறுதியில் பதிமூன்று லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு, 'சிவாஜி'யின் (25 காட்சிகள்) சாதனையை முறியடித்த 'குருவி', கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.37 லட்சத்தை வசூல் செய்தது. இதன்மூலம், முதல் இருதின வசூலில் 'பில்லா'வை முந்தியது.

விமர்சனம் குருவி


குருவி -->
கொத்தடிமைகளை மீட்க பருந்தின் பலத்தோடு போராடும் ஒரு குருவியின் கதை இது.
காயலாங்கடை காரை வைத்தே ரேஸில் ஜெயிக்கும் அசகாய சூரன்தான் ஹீரோ என்றால் அவர் செய்யும் மற்ற சாகசங்கள் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்.
அப்பாவுக்கு மலேசிய பெரும்புள்ளி ஒருவர் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காக குருவியாக (உயர்ரக பொருட்களை நாடு விட்டு நாடு சேர்க்கும் வேலை) மலேசியா செல்கிறார் நாயகன் விஜய். போன இடத்தில்தான் புரிகிறது அந்த பெரும்புள்ளி (சுமன்) மலை விழுங்கி மகாதேவன் என்பது.
அப்புறமென்ன வில்லன் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்ட, வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறார். இடையில் வில்லனின் தங்கையான த்ரிஷாவிற்கு விஜய் மேல் காதல் ஏற்படும் காட்சிகளும் எந்த படத்திலும் காணாத (புதுமை). சுமன் வைத்திருக்கும் டைமண்டை 'சுட்டு'க்கொண்டு சென்னை வரும் விஜய்க்கு அப்பாவும் அவரை சேர்ந்த ஆட்களும் கொத்தடிமைகளாக ஆந்திராவில் இருக்கும் தகவல் வர, அடுத்த ஷாட்டுகளில் கதாநாயகனின் அதிரடி கடப்பாவையே கலங்கடிக்கிறது. நூற்றுக்கணக்கான அடியாட்களை ஸாரி தடியாட்களை தவிடுபொடியாக்கி சக்ஸஸ் சாகசம் புரிவதுடன் கொத்தடிமைகளுக்கும் நமக்கும் கிடைக்கிறது விடுதலை.
விஜய்யை சூப்பர்மேன் ரேஞ்சுக்கு உயர்த்தி காட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் கோயம்பேடு மலர் அங்காடியை படம் பார்ப்பவர்களின் காதுக்கு மாற்றியிருக்கும் தரணியின் உழைப்பிற்கு போடலாம் சலாம்!
மின்னல் வேகத்தில் பாயும் காரிலிரு்து கட்டாகும் பிரேக் கேபிளை பற்களால் இழுத்துபிடித்து பேலன்ஸ் செய்யும் விஜய்க்கு உயரமான கட்டிடத்திலிருந்து பறந்துவந்து மின்சார ரெயிலை பிடிப்பதும், கயிற்றில் தொங்கியபடி அந்தரத்திலிருந்து கீழே விழும் த்ரிஷாவை அழகாக காப்பாற்றுவதும் சிரமமான காரியமா என்ன?


பத்து விநாடிகளில் வில்லன் வைத்திருக்கும் டைமண்டை விஜய்யின் கைக்கு வரவைக்கும் வித்தையெல்லாம் ஹாலிவுட் காரர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
கடப்பாவிற்கு கதை நகர்ந்தவுடன் ஆந்திரா காரத்தை அள்ளித் தெளிக்க, நம் கண்களெல்லாம் எரிச்சலில் அழ ஆரம்பிக்கிறது. விஜய் அடித்த அடியில் சுயநினைவிழந்துபோகும் நிலைமை சுமனு்ககும் அவரது ஆட்களுக்கும். விஜய்போல பலம் பொருந்திய வீரர்கள் இந்திய ராணுவத்திற்கு தேவை.
இடுப்பு சுளுக்கு காட்சியில் ஆரம்பித்து 'மொழுமொழுன்னு யம்மா...' பாட்டுவரை நிறையவே பயன்பட்டிருக்கிறது த்ரிஷாவின் மத்தியபிரதேசம்.
சுமன் கோமா ஸ்டேஜிக்கு போனதும் அந்த இடத்தை யார் நிரப்புவது என யோசித்த இயக்குனர், ஆசிஷ் வித்யார்த்தியை கொஞ்சநேரம் சுத்தவிடுகிறார். கொண்டா ரெட்டி கதாபாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கு மற்ற படங்களை போலதான் இதிலும் ஒரே மாதிரியான ரியாக்ஷ்ன்.
என் மகன் எப்படியாவது எங்களை காப்பாத்த வருவாண்டா...என்று டயலாக் போசும் லட்சத்தில் ஒரு சினிமா தந்தையாக மணிவண்ணன்.
பல குரலில் பேசியே காலந்தள்ள பார்க்கும் விவேக்கின் திறமையும் பாராட்டுக்குரியது. எருமை மாடு மாதிரி இருந்து கொண்டு சிறுவனின் பிஞ்சு விரல் மசாஜ் சுகம் காணும் கடப்பா ராஜூ கேரக்டரெல்லாம் வக்கிரத்தின் உக்கிரம். பறக்கும் குருவி

Wednesday, May 7, 2008

விஜய்யின் புதிய படம் 'சிங்கம்'


விஜய்யின் கமர்ஷியல் பார்முலாதான் 'சிங்கம்' படத்தின் கதையாம். இந்தப் படம் முடிந்ததும் ஏவி.எம்.நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் விஜய் மீண்டும் உதயநிதிக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளராம்.ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த படத்திற்கு 'புலி' என பெயர் வைத்து பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மூவர் கூட்டணியின் மீண்டுமொரு வெற்றி "குருவி"
[ Sunday, 04 May 2008, 06:16.48 PM GMT +05:30 ][ எம்.எஸ்.என் ]
வெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (!?), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.
விஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.விஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.


காதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்‍ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது. கோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்‍ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.

'குருவி' news


குட்டி ரஜினியாகவே
கருதப்படுகிறார் விஜய். ரஜினி படங்கள் வெளிவரும் போது Vijayஎப்படி தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவே அஞ்சுவார்களோ, அப்படி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் நடித்த படங்கள் வருகிற நேரத்திலும். குருவி படம் மே 10-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆக்சனுக்கு விஜய், இளமைக்கு த்ரிஷா, விறுவிறுப்புக்கு தரணி என 'குருவி'க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ள நிலையில், மே 10ல் படம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.




vijay in 1st film nalayatheerppu

இளைய தளபதி" விஜய்

விஜய், (பிறப்பு - ஜூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைகத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.





நன்றி