விஜய்யின் புதிய படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விரைவில் தொடங்குகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் சுமார் என்பதால் உஷாராக ரீ-மேக் படத்தை தேர்வு செய்துள்ளார் விஜய்.இந்தியில் அமிதாப் நடித்த 'சோல்ஜா' படத்தின் ரீ-மேக் தமிழுக்கு ஏற்ற காரம் மசாலாவுடன் தயாராகியிருக்கிறது. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்துள்ளனர்.'தசாவதாரம்' படத்தின் ஒளிப்பதிவாளரும் 'மாஸ்கோவின் காவிரி' படத்தின் இயக்குனருமான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பது தேவிஸ்ரீபிரசாத்.கஜகஸ்தானில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதால், லொக்கேஷன் பார்க்க முதன்மை தயாரிப்பாளர் அருண் பாண்டியனும், பிரபுதேவாவும் கஜகஸ்தான் சென்றுள்ளனர். இப்போதுள்ள ஒரே பிரச்சனை, பெயர், சிங்கம் என்ற பெயருக்கு ஹரி சொந்தம் கொண்டாடுவதால், நல்ல பெயராக தேடி வருகிறார்கள். சிங்கம் மாதிரி உறுமலாக பெயர் இருந்தால் நீங்களும் பிரபுதேவாவுக்கு உதவலாம்kuruvi thiraivimarsanam
No comments:
Post a Comment