
மூவர் கூட்டணியின் மீண்டுமொரு வெற்றி "குருவி"
[ Sunday, 04 May 2008, 06:16.48 PM GMT +05:30 ][ எம்.எஸ்.என் ]
வெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (!?), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.
விஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.விஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.
காதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது. கோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.
No comments:
Post a Comment